Last Updated : 09 Dec, 2015 03:40 PM

 

Published : 09 Dec 2015 03:40 PM
Last Updated : 09 Dec 2015 03:40 PM

தமிழகத்தில் 14 வெள்ள முன்னறிவிப்பு மையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு

தமிழகத்தில் 14 இடங்களில் வெள்ள முன்னறிவிப்பு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பருவம் தவறிய கனமழை பரவலாக பெய்துள்ளதாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தை கருத்தில் கொண்டும் நாடு முழுவதும் 100 இடங்களில் வெள்ள முன்னறிவிப்பு மையங்கள் புதிதாக அமைக்கப்படும்.

இவற்றில் அருணாச்சல பிரதேசத்தில் (3), இமாச்சலப் பிரதேசத்தில் (1), கேரளாவில் (1), ராஜஸ்தானில் (12), சிக்கிமில் (8) மற்றும் தமிழகத்தில் (14) வெள்ள முன்னறிவிப்பு மையங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.

மற்றவை இதுவரை வெள்ள முன்னறிவிப்பு இல்லாத மாநிலங்களில் அமைக்கப்படும்.

இதற்காக பிரதான ஆறுகளிலும் அதன் கிளைகிலும் 878 இணைப்பு மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் வெள்ள முன்னறிவிப்புகள் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x