

நம் நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி, பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர் கான், சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆசம் கான் ஆகியோர் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர் என்று விஎச்பி தலைவர் சாத்வி பிராச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று ஜாம்ஷெட்பூரில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற சூழ்ச்சியின் அடிப்படையிலேயே நம் நாட்டில் சகிப்பின்மை நிலவுவ தாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதற்கு உடன்பட்டு சில தேச துரோகிகள் தங்கள் விருதுகளை திரும்ப அளிக்கின்றனர். சகிப் பின்மை குறித்த கருத்துகள் மூலம் பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர் கான், சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆசம் கான் ஆகியோர் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இணைந்து இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
தாத்ரி சம்பவம் குறித்து கேட்கிறீர்கள். நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்துக்கள் ஒருபோதும் கலவரங்களை தொடங்குவதில்லை. பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சி விருந்து அளிப்பதன் மூலம் சிலர் வேண்டு மென்றே இந்துக்களை வன் முறைக்கு தூண்டுகின்றனர். தாத்ரி சம்பவத்தை சிபிஐ விசாரித்தால் உண்மை வெளிவரும். இவ் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சமாஜ்வாதி கட்சி அரசு தயங்கு வதன் காரணம் புரியவில்லை.
ஹஜ் மானியத்தை ரத்து செய்து அத்தொகையை முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்.
இவ்வாறு சாத்வி பிராச்சி கூறினார்.