

புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் தர்மேந்திரா நேற்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடினர்.
அமிதாப் பச்சன் உள்ளிட்ட மும்பை திரையுலக சகாக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தர்மேந்திராவின் மகனும் நடிகருமான சன்னி தியோல் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ஹீரோ, எனது சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். மேலும் தர்மேந்திரா, சகோதரர் பாபி ஆகியோருடன் கூடிய தனது புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அமிதாப், சமீபத்தில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ஷோலே படத்தில் தர்மேந்திராவுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மும்பை திரையுலகின் முன்னணி கலைஞர்கள் பலர் தர்மேந்திராவுக்கு வாழ்த்து தெரி வித்துள்ளனர்.