இன்று திருப்பதி மக்களவை தொகுதியில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்

இன்று திருப்பதி மக்களவை தொகுதியில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்
Updated on
1 min read

திருப்பதி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக - ஜனசேனா கூட்டணி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தலுக்கு 2,900 போலீஸார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பதி, காளஹஸ்தி, சத்யவேடு, வெங்கடகிரி, கோடூரு, சர்வேபள்ளி ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சட்டப்பேரவை தொகுதிகளில் அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலையொட்டி, நேற்று திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்போடு அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்களும் நேற்றே சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இவர்களுக்கு உதவியாளர்களாக கரோனா நிபந்தனைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூற, துப்புரவு தொழிலாளர்களும் உடன் சென்றனர். மொத்தம் 1,056 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 7.40 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in