

உபி மாநில கிரிமினல்கள் பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் முக்தார் அன்சாரி. கடந்த 15 வருடங் களுக்கும் மேலாக சிறைவாசத்தில் இருக்கும் இவர் தொடர்ந்து பல கட்சிகள் மாறி தேர்தல்களில் போட்டியிட்டு எம்எல்ஏ, எம்பி-யாகி வருகிறார். தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் முகம்மதாபாத் எம்எல்ஏ-வாக இருக்கிறார் அன்சாரி. 2017-ல், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் சிறைக்கு மாற்றப்பட்ட அன்சாரியை தற்போது உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று உபி சிறைக்கு மாற்றி இருக்கிறது ஆதித்யநாத் அரசு. அடுத்த அதிரடியாக அன்சாரியின் எம்எல்ஏபதவியை பறிக்கும் வேலையிலும் உபி அரசு ஈடுபட்டுள்ளது. உபி மாநில சட்டப்பேரவை விதிகளின்படி, தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பேரவைக்குவராத உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய இடமிருக் கிறதாம். இந்த ஷரத்தைப் பயன்படுத்தி அன்சாரியின் பதவிக்கு வேட்டுவைக்கப் போகிறதாம் பாஜக.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்