

கேரளத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 71 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனோ, “35 இடங்களில் வென்றாலே கேரளத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்” என்கிறார். வாக்குப்பதிவு முடிந்த பிறகும் சுரேந்திரன் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருவதால், “பாஜக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறது” என காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாத சுரேந்திரன், “காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளில் போட்டியிடுபவர்களில் எங்களது ஸ்லீப்பர் செல்களும் இருக்கிறார்கள்” என இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்