Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

முதல்முறை யூடியூப் சேனலை தொடங்கியது காங்கிரஸ் கட்சி: ஏப்.24 முதல் ஒளிபரப்பு

இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியை கொண்டு சேர்க்கும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றினை அகில இந்திய காங்கிரஸ் முதல் முறையாக தொடங்கியுள்ளது.

'ஐஎன்சி டிவி' (INC TV) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேனலை, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் நீரஜ் குந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் நேற்று தொடங்கினர்.

வரும் 24-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த சேனலில் தினமும் 8 மணி நேரம் நேரலை நிகழ்வு கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

அம்பேத்கரின் பிறந்த தினத்தில் காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க தரு ணம். இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள், ஆளும் பாஜகவுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாகவே செயல் படுகின்றன.

எதிர்க்கட்சிகளின் குரல்களை மக்களிடம் அவை கொண்டு சேர்ப்பதில்லை. எனவே தான், காங்கிரஸ் கட்சிக்கென பிரத்யேக யூடியூப் சேனல் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் கட்சியின் அன்றாட நடவடிக்கைகள், முக்கிய அறிவிப்புகள் உட்பட அனைத்தையும் இளைஞர் களிடத்தில் கொண்டு சேர்க்க முடியும். இனி 'ஐஎன்சி டிவி' சேனல் மூலம் நாட்டில் நடக்கும் அனைத்து உண்மைகளும் மக்களிடம் சென்றடையும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x