Last Updated : 15 Apr, 2021 03:10 AM

 

Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

கர்நாடகாவில் தொடர்ந்து 7 நாட்கள் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு

கர்நாடக அரசு போக்குவரத்து கழக‌ ஊழியர்கள் 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களாக நியமனம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன‌ர். மாநிலம் முழுவதும் 1.2 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வராத தால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட‌ வில்லை. இதனால் அரசுக்கு ரூ.15 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

கோடை விடுமுறை, யுகாதி பண்டிகை உள்ளிட்டவற்றுக்காக ஊருக்கு செல்வோர், பணிக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் என லட்சக்கணக்கானோர் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அரசு பேருந்துகள் இயக்கப்படாத சூழலை பயன்படுத்தி தனியார் பேருந்து, ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் ஆகியோர் கூடுதல் கட்டணம் வசூலித்தனர்.

இந்நிலையில் ஊழியர் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் அரசு பேச்சு வார்த் தைக்கு அழைக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த முதல்வர் எடியூரப்பா,‘‘ஊழியர்களின் 10 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாதம் வேலை நிறுத்தம் செய்தாலும் பேச்சுக்கு அழைக்க மாட்டோம்’’ என்று கூறிவிட்டார்.

இதனால் ஊழியர் சங்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்த நிலையில், போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனிடையே காங்கிரஸ், மஜத, பயணிகள் நல சங்கம் உள்ளிட்டோர் அரசும் ஊழியர்களும் பேசி சுமூகமான முடிவை எட்ட வேண்டும். வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பணிக்கு திரும்பியதை தொடர்ந்து 600 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் சிலர் பேருந்துகள் மீது கல் வீசியதில் 17 பேருந்துகள் சேதமடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x