

சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட் டத்தில் நேற்று நக்ஸல்கள் நிகழ்த்திய கண்ணி வெடி தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
சிபிஐ மாவோயிஸ்ட் இயக் கத்தினர் மக்கள் விடுதலை கெரில்ல ராணுவ வார கொண்டாட்டட்டத்தை ஆரம் பித்து முதல்தினத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜிதேந்திர சிங் மீனா இது தொடர்பாகக் கூறியதாவது:
கொயாலிபேடா பகுதி அருகே எல்லை பாதுகாப்புப் படையினரும் மாவட்ட போலீஸாரும் இணைந்து மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்பணியில் ஈடுபட்ட போது கண்ணிவெடி மூலம் மாவோயிஸ்ட்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
மர்கானர் வனப்பகுதியில் தேடியபோது அப்போது கண்ணிவெடியில் சிக்கி மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 2 காவலர்கள் மிக மோச மாக காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராய்ப் பூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி துணை கான்ஸ்டபிள் பைஜுராம் பொடாய் உயிரிழந்தார். கான்ஸ்டபிள் சந்த்ராம் நேதம் நிலைமை மோசமான நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை கெரில்ல ராணுவ வாரவிழாவையொட்டி தங்களின் இயக்கம் குறித்து நக்ஸல்கள் தீவிர பிரச்சாரம் செய்வர். இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவர்.