Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான உற்பத்தி வரி 96 சதவீதம் அதிகரிப்பு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு மீதான உற்பத்தி வரி கடந்த 7 ஆண்டுகளில் 96 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

2013-14ம் ஆண்டு முக்கியமான மூன்று அத்தியாவசிய பொருள்கள் மீதான உற்பத்தி வரி ரூ.12,35,870 கோடியாகும். இந்த அளவானது ஜனவரி 2021-ம் ஆண்டில் ரூ.24,23,020 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு அளவில் 96 சதவீதம் அதிகமாகும்.

பெட்ரோல் விலை அதிகரிப்பு லிட்டர் ரூ.100-ஐ தொட்டபோது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விமானங்களுக்கான எரிபொருள் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x