Published : 10 Dec 2015 10:39 AM
Last Updated : 10 Dec 2015 10:39 AM

நாடாளுமன்ற துளிகள்: நேர்முகத் தேர்வுக்கு அனுமதி தேவை

நேற்று மக்களவை, மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

நேர்முகத் தேர்வுக்கு அனுமதி தேவை

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்:

மத்திய அரசுத் துறைகளில் குரூப் பி- கெஜடட் அல்லாத ஊழியர்கள், குரூப் சி பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. சில துறைகள் நேர்முகத் தேர்வு கட்டாயம் எனக் கருதினால், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். மத்திய தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மற்றும் மத்திய அமைச்சகங்கள் இந்த உத்தரவை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடு வாழ் இந்தியர் தற்கொலை

வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை இணையமைச்சர் வி.கே. சிங்:

நடப்பாண்டு இதுவரை 436 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2013-ல் 497 பேரும், 2014-ல் 451 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 541 இந்தியர்களும், சவூதியில் 337 பேரும், ஓமனில் 123 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 2012 முதல், ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய நாடுகளில் மட்டும் 36 ஆயிரத்து 714 இந்தியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x