பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரிப்பு

பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரிப்பு
Updated on
1 min read

காஷ்மீரில் கடந்த 2016-ம் ஆண்டுஹிஸ்புல் தீவிரவாதிகள் நடத்தியதாக்குதல் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுற்றுலாத் துறை முற்றிலுமாக முடங்கியது. கடந்த டிசம்பர் மாதத்தில் பனி சூழ்ந்த காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, ஜனவரி மாதத்திலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அங்குள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் 70 சதவீத அளவுக்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் ஸ்ரீநகரின் பிரபலமான புலிவார்டு சாலையில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமாக இருந்தது. அத்துடன் ஹோலி மற்றும் ஷாப்-இ-பரார்பண்டிகையும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. காஷ்மீரில் வீடுகள் போன்ற படகுகளில் சவாரி மிகவும் பிரபலமானது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் இதுபோன்ற படகு சவாரிக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படும்.

துலிப் எனப்படும் அல்லி மலர்கள் காஷ்மீரின் கண்கொள்ளாக் காட்சிகளுள் ஒன்று. இதைக்காண பூங்காவுக்கு ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வந்துள்ளனர். நகரில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மட்டுமின்றி அருகில் உள்ளபகுதிகளான குல்மார்க், பாகல்காம், சோன்மார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள், ஹோட்டல்களும் ஜூன் மாதம் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகுதற்போதுதான் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in