

கர்நாடகாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கரோனாதொற்றின் 2-ம் அலைதொடங்கியது. புதிய நோயாளிகள்எண்ணிக்கை இரு வாரங்களாக 5 ஆயிரத்தை கடந்தது. இதனால் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கரோனாதொற்று இல்லை என்பதற்கானசான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழிப்பாட்டுத் தலங்கள், கேளிக்கைவிடுதிகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கரோனா அதிகமாக பரவி வரும் பெங்களூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகள் குறித்து பிரதமர்மோடி ஆலோசனை வழங்கி னார். அந்த மாவட்டங்களில் கரோனா பரிசோதனை மையங் கள் திறக்கப்பட்டு, பணிமுடுக்கி விடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்துவ தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கல்புர்கி, பீதர்,துமகூரு, உடுப்பி, மணிப்பால் ஆகிய 8 நகரங்களில் சனிக் கிழமை முதல் 20-ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஆனால் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை.
ஏப்ரல் 11 முதல் 14 வரை கர்நாடகா முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறும். இதற்காக மாநிலம் முழுக்க 6 ஆயிரம் இடங்கள் தயார் நிலையில் உள் ளன. கர்நாடகாவில் இதுவரை 53 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் மேலும் பல லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.