Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM

ஒடிசா முன்னாள் முதல்வர் ஹரேகிருஷ்ணா எழுதிய ‘ஒடிசா இதிகாசம்’ நூலின் இந்தி பதிப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

ஒடிசா முன்னாள் முதல்வர் எழுதிய ‘ஒடிசா இதிகாசம்’ என்ற நூலின் இந்தி மொழிபெயர்ப்பு பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ‘உத்கல் கேசரி’ ஹரேகிருஷ்ணா மஹதாப், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1946 முதல்1950 வரை மற்றும் 1956 முதல் 1961வரையில் ஒடிசா முதல்வராக பதவி வகித்துள்ளார். மாநில வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர் ஆவார்.இவர் எழுதிய ஒடிசா இதிகாசம் என்ற நூல் இதுவரை, ஒடியா மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் இதன் இந்தி மொழி பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பிஜு ஜனதா தளம் எம்.பி.யும் ஹரேகிருஷ்ணாவின் மகனுமான பர்த்ருஹரி மஹதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காகவும் மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காகவும் ஹரேகிருஷ்ணா மக்களால் என்றென்றும் நினைவுகூரப்படுகிறார். மாநில கலாச்சாரத்தை வளர்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஹரேகிருஷ்ணாவின் 120-வது பிறந்த நாளை கொண்டாடினோம். இன்று அவர் எழுதிய புகழ்பெற்ற நூலின் இந்தி மொழி பதிப்பை வெளியிடுகிறோம். ஒடிசாவின் வரலாறு பற்றி நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.எனவேதான் அவரது நூல் இந்தியில் வெளியிடப்படுகிறது.

இப்போது சுதந்திரப் போராட்டவீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம். அப்போதுதான் அதைப்பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், உணரவும் முடியும். மேலும்புதிய நம்பிக்கையுடன், ஏதாவது செய்ய வேண்டும் என்ற புதியதீர்மானங்களை நோக்கி இளைஞர்கள் முன்னேறிச் செல்லவும் உதவும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x