

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பீட்டர் முகர்ஜியின் (59) நீதிமன்றக் காவலை மும்பை நீதிமன்றம் வரும் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பீட்டரின் 14 நாள் நீதி மன்றக் காவல் முடிந்ததையடுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.வி.அடோன் முன் னிலையில் இதுதொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது பீட்டரின் வழக்கறிஞர் குஷால் மோர் நீதிமன்றத்தில் ஆஜரானார். எனினும் பீட்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை.
விசாரணையின் போது, சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் கவிதா பாட்டீல் கூறும்போது, “விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்” என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பீட்டர் முகர்ஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 11 வரை 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.