

சில தினங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சடைட் களின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 22 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நவீன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நக்சலைட்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வில், அம்புவிலிருந்து..
நக்சலைட்கள் ஆரம்ப காலகட்டத்தில் வில், அம்புகளைப் பயன்படுத்தி தாக்கு தல் நடத்தி இருக்கின்றனர். ஆரம்பத்தில் நக்சலைட்கள் அவர்களுக்கான ஆயுதங்களை ஊர் மக்களிடமிருந்து பெற்றனர்.
அதேபோல், காவல் நிலையங் களில் தாக்குதல் நடந்தி அங் கிருந்து ஆயுதங்களைப் கைப் பற்றுவர். ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காகவே காவல் நிலையத்தை தாக்குவதுண்டு. பாதுகாப்பு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தும் ஆயுதங்கள் வாங்குவதுண்டு. தற்போது நக்சலைட்கள் உலகளாவிய தொடர்புகள் வழியே ஆயுதங்கள் பெற்று வரு கின்றனர்.
15 வருடங்களுக்கு முன்பு, நக்சலைட்கள் அவர்கள் குழுவில் இருப்பவர்களுக்கு ஆயுதத் தயாரிப்பில் பயிற்சி வழங்கினர். குறிப்பாக நேபாளத்தில் ஆயுதத் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படும்.
அதைத் தொடர்ந்து நக்சலைட்கள் சொந்தமாகவே ஆயுதங்கள் தயாரிக்கத் தொடங்கினர். கண்ணிவெடி, வெடிகுண்டுகள் போன்றவற்றைத் தயாரித்தனர்.
பயன்படுத்த பயிற்சி
அதன் பிறகு அவர்கள் நவீன ரக ஆயுதங்களுக்கு நகர்ந்தனர். முதன்முறையாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு (எல்டிடிஇ) வழியாகவே வெளிநாடுகளிலிருந்து நவீன ரக ஆயுதங்கள் அவர்களுக்குக் கிடைத்தது. அந்த அமைப்பு நக்சல்களுக்கு ஆயுதங்களை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்படுத்த பயிற்சியும் வழங்கியது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகு,நாகாலாந்து தேசிய சோஷலிசகுழு வழியாக நக்சலைட்கள்ஆயுதங்களை பெறத் தொடங்கினர். வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகள் வழியாக ஆயுதங்கள் நக்சலைட்களை வந்து சேரும்.
சத்தீஸ்கரின் தாண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இம்மாவட்டங்களில் நக்சல் தாக்கு தல்கள் நிகழ்வது வழக்கமாக மாறியுள்ளது.