Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

‘சிஆர்பிஎப் வீரர்களை தடுக்கச் சொல்வதா?’- மம்தா மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள சிஆர்பிஎப் வீரர் கள், வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர். அவர் களை கண்காணிக்க வேண் டும். பெண் வாக்காளர்கள் சிஆர்பிஎப் வீரர்களை முற்றுகையிட வேண் டும். ஒரு குழுவினர் சிஆர்பிஎப் படையினருடன் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் போது இன் னொரு குழுவினர் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் எல்லாரும் வாக்களிக்க முடியும்’’ என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மம்தாவின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மம்தா மீது தலைமை தேர்தல் ஆணையத் திலும் புகார் அளித்துள்ளது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மேற்குவங்க பாஜக தலைவர் சிஷிர் பஜோரியா புகார் அளித்துள்ளார். சிஆர்பிஎப் வீரர்கள் குறித்து மம்தா தெரிவித்துள்ள கருத்துக்கள் தேசத்துரோகம் என்றும் மம்தா பானர்ஜியின் பிரச்சாரத்துக்கு தடை விதித்து அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘புகார் குறித்து கூச் பெஹார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, மம்தா பானர்ஜியின் பேச்சைத் தொடர்ந்து கூச் பெஹார் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷின் காரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கிய தாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதலில் தனது காரின் கண்ணாடிகள் உடைந்ததாகவும் தன்னுடன் வந்த பல கார்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் திலீப் கோஷ் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் மறுத் துள்ளது. பாஜகவின் உட்கட்சி பூசலால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டு தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் இதில் திரிணமூல் காங்கிரசுக்கு தொடர்பு இல்லை என்றும் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x