Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

மாவோயிஸ்ட்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிப்பு

மாவோயிஸ்ட்கள் விடுவித்த பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ்.

புதுடெல்லி

கோப்ரா படை வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸை மாவோயிஸ்ட்கள் நேற்று விடுவித்தனர்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்களான பத்ம தரம்பால் சைனி, கோண்ட்வானா சமாஜ் ஆகிய இருவர் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் முன்னிலையில் அவர் விடுவிக் கப்பட்டார். ராகேஷ்வர் சிங்கின் விடுதலையை மத்திய பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் உறுதி செய்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர்-சுக்மா மாவட்ட வனப்பகுதியில் கடந்த 3-ம் தேதி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்முவைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய கோப்ரா படை வீரர் ராகேஷ்வர் சிங் காணாமல் போனார். இந்நிலையில் ராகேஷ் வர் சிங்கை தாங்கள் சிறை பிடித்து வைத்துள்ளதாகவும், அவரை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவின் பெயரை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் மாவோயிஸ்ட் அமைப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, ராகேஷ்வர் சிங் வனப்பகுதியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை நேற்று முன்தினம் மாவோயிஸ்ட் அமைப்பு வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து, ராகேஷ்வர் சிங்கை மாவோயிஸ்ட்களிடம் இருந்து மீட்டுத்தரக் கோரி அவரது குடும்பத்தினரும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடு பட்டனர். இந்நிலையில், அவரை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக ஜம்மு- காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அவரைமாவோயிஸ்ட்கள் விடுவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x