

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் வருவாய், காவல், சுகாதாரத் துறைகளின் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் கரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிடவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தவும் இவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம்:
அரியலூர் - தாரேஸ் அகமது, செங்கல்பட்டு - சி.சமயமூர்த்தி, கோவை - என்.முருகானந்தம், கடலூர்- ககன்தீப்சிங் பேடி, தருமபுரி - நீரஜ் மிட்டல், திண்டுக்கல் - மங்கத்ராம்சர்மா, ஈரோடு - காக்கர்ல உஷா, காஞ்சிபுரம் -எல்.சுப்பிரமணியன், கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி, கரூர் - சி.விஜயராஜ்குமார், கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ், மதுரை - பி.சந்திரமோகன், நாகை, மயிலாடுதுறை - சி.முனியநாதன், நாமக்கல் - தயானந்த் கட்டாரியா, நீலகிரி - சுப்ரியா சாஹு, பெரம்பலூர் - அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர்.
ராமநாதபுரம் - தர்மேந்திர பிரதாப் யாதவ்,ராணிப்பேட்டை - ஜி.லட்சுமி பிரியா, சேலம் - நசிமுதீன், சிவகங்கை - மகேசன் காசிராஜன், தென்காசி - அனு ஜார்ஜ், தஞ்சாவூர் - என்.சுப்பையன், தேனி - ஏ.கார்த்திக், தூத்துக்குடி - குமார் ஜெயந்த், திருச்சி -ரீட்டா ஹரீஷ் தாக்கர், திருநெல்வேலி - அபூர்வா, திருப்பத்தூர் - டி.எஸ்.ஜவகர், திருப்பூர் - கே.கோபால், திருவள்ளூர் - கே.பாஸ்கரன், திருவண்ணாமலை - தீரஜ்குமார், திருவாரூர் - ஷில்பா பிரபாகர் சதீஷ், வேலூர் - ராஜேஷ் லக்கானி, விழுப்புரம் - ஹர்சகாய் மீனா, விருதுநகர் - எஸ்.மதுமதி.
இதேபோல, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.