

கரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சென்று ஆண்டுமார்ச் மாதம் இந்தியாவில்ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக நாடுகள் அதன் எல்லைகளை மூடின. இதனால் உலகளாவிய அளவில் பொருளாதாரச் செயல்பாடுகள் முடங்கின. வேலையிழப்பு, ஊதியக்குறைப்பை மக்கள் எதிர்கொண்டனர். இதனால் உலகப் பொருளாதாரம் கடும் சரிவுக்கு உள்ளானது.
இந்தியாவில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்செயல்பாடுகள் ஊக்கம் பெறத் தொடங்கின. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்)வெளியிட்ட கணிப்பில் 2021-22ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தது. இந்நிலையில் தற்போதைய கணிப்பில் வளர்ச்சி விகிதம் 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12.5 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அதேபோல் 2022-23-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் 12.5 சதவீத வளர்ச்சி என்பது வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் வளர்ச்சி விகித்தைவிட அதிகம்.