

நாட்டில் அழிந்து வரும் யானை களை பாதுகாப்பதற்கு பாலிவுட் பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டி யுள்ளனர்.
இதற்கான முயற்சியில் விலங்கு கள் பாதுகாப்பு அமைப்பு ஒன் றுடன் இணைந்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி களமிறங்கி யுள்ளார்.
வனவிலங்குகளின் பாது காப்புக்காக, வனவிலங்கு ஆர் வலர்களால் ‘வைல்டு லைஃப் எஸ்.ஓ.எஸ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது பன் னாட்டு அமைப்பாக வளர்ந்து விட்ட இதன் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் யானைகள் பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் காயத்தால் துன்புறும் யானைகள் இங்கு கொண்டுவரப் பட்டு, சிகிச்சை அளித்து பராமரிக் கப்படுகின்றன. இதனால் ஏற்படும் செலவை சமாளிப்பதற்கு, அந்த அமைப்புக்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நிதி திரட்டும் பணியில் இந்த அமைப்புக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி யும் உதவி வருகிறார்.
இந்தவகையில், இம்முறை அவர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஆமிர்கான், அக் ஷய்குமார் உட்பட 50-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் உதவ முன்வந்துள்ளனர்.
இவர்களுடன் சர்வதேச புகழ் பெற்ற ஓவியர்கள் பலர், ஃபைபர் கண்ணாடியிலான யானை சிலை களில் தங்கள் கைவண்ணத்தை காண்பிக்க உள்ளனர். இந்த யானை சிலைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை இந்தியாவில் யானைகளின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து மேனகா காந்தி கூறும்போது, “நம் நாட்டில் யானை களை பாதுகாக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. இல்லை யென்றால் அவை முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதற்காக போதிய நிதி வழங்க அரசு முன் வராததால், விலங்கு கள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டு வோர் மூலம் நிதி திரட்ட வேண்டி உள்ளது. இதற்காக முகாம் வரும் 28-ம் தேதி முதல் 30 வரை டெல்லி யின் லீமெரிடியன் ஹோட்டலில் நடைபெற உள்ளது” என்றார்.
தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்ச கத்திடம் உள்ள புள்ளிவிவரப்படி, நாட்டில் 22,000 யானைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் காயம் அடைந்த மற்றும் பல்வேறு தரப்பின ரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள யானைகள் சுமார் 6000 உள்ளன. இத்துடன் ஆண்டுக்கு சுமார் 600 யானைகள் மனிதர்களுடனான மோதல் உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழக்கின்றன. எனவே யானைகளை காக்கும் பணியில் இறங்கியுள்ள வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ் போன்ற அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்ச கத்துக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியிருந் தார்.
இதற்கு தங்களிடம் அதற் கான நிதி ஏதும் இல்லை என அமைச்சகம் கைவிரித்து விட்டது. எனவே மேனகா, தான் முன்னின்று நடத்தும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான ‘பீப்பிள் பார் அனிமல்’ சார்பில் யானைகள் பாதுகாப்புக்கு நிதி திரட்டும் பணியில் இறங்கி விட்டார்.
‘யானையை கட்டி தீனி போடுவது இயலாத காரியம்’ என்ற சொல் வழக்கு உள்ளது. இதற்கு ஏற்ப ஒரு யானைக்கு சிகிச்சை அளித்து பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.