

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு தனது அறிக்கையை நாளை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்த அறிக்கையில் மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான பரிந் துரையும் இடம்பெற்றிருக்கும்.
இதுகுறித்து அக்குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் நேற்று கூறும்போது, “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யதாரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான அறிக்கை தயாராகி விட்டது. இந்த அறிக்கை நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும்” என்றார்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-வது ஊதியக் குழுவை அமைத்தது. நாடு முழுவதும் உள்ள 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர் பாக பரிந்துரை வழங்குமாறு அந்தக் குழுவைக் கேட்டுக் கொண்டது.
இக்குழுவின் பதவிக் காலத்தை டிசம்பர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யது குறிப்பிடத்தக்கது. இந்த பரிந் துரைகள் 2016, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.