சத்தீஸ்கர் என்கவுன்டர்:  காணாமல் போன வீரர் மாவோயிஸ்ட்டுகள் வசம் இருப்பதாக தகவல்

சத்தீஸ்கர் என்கவுன்டர்:  காணாமல் போன வீரர் மாவோயிஸ்ட்டுகள் வசம் இருப்பதாக தகவல்
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் கொடூர தாக்குதல் நடத்திய போது காணாமல் போன அதிரடிப்படை வீரர் அவர்கள் வசம் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் கூட்டாக மிகப் பெரிய அளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா்.

இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியாகின. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பல வீரர்களில் காணாமல் போயினர். இதனால் உடனடியாக கூடுதல் படைகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். தாக்குதல் பகுதியில் இருந்து அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த தாக்குதலில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். 15 -பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் காணாமல் போனார்.

மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்ட 22 வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். அவருடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் உடன் சென்றார். பின்னர் நிலவரம் குறித்து துணை ராணுவப்படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் கொடூர தாக்குதல் நடத்திய போது காணாமல் போன அதிரடிப்படை வீரர் அவர்கள் வசம் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

பிஜாபூர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளரான கணேஷ் மிஸ்ரா கூறியதாவது:

மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் கட்டுப்பாட்டில் ஒரு வீரர் இருப்பதாகவும் அவர் குண்டடி பட்டு காயம் ஏற்பட்டதால் அவருக்கு தாங்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறினர்.

இரண்டு நாட்களில் அந்த வீரரை விடுதலை செய்வதாகவும், அவரது போட்டோ மற்றும் வீடியோவை விரைவில் வெளியிட இருப்பதாகவும் மாவோயிஸ்ட்டுகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in