ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: மகிழ்ச்சியில் அமிதாப் பச்சன்

ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: மகிழ்ச்சியில் அமிதாப் பச்சன்

Published on

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை ‘ட்விட்டர்’ மூலம் பின்தொடருவோர் எண்ணிக்கை 1.8 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்காக தன் ரசிகர்களுக்கு அவர் மிகுந்த நன்றி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகமான ‘ட்விட்டரில்’ பிரபலமானவர்களை பின்தொடரு வோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் அமெரிக்கா அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி ஆகியோருக்கு பின்தொடர் பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனை பின்தொடர்வோர் எண் ணிக்கை தற்போது 1.8 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் அமிதாப் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘1.8 கோடி பேர்… உங்கள் அன்புக்கு மிகுந்த நன்றி. அடுத்ததாக 2 கோடியை எட்ட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். அமிதாப்புக்கு அடுத்தபடியாக ஷாருக்கான் இடம்பெற்றுள்ளார். இவரை 1.64 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in