Published : 04 Apr 2021 14:17 pm

Updated : 05 Apr 2021 19:29 pm

 

Published : 04 Apr 2021 02:17 PM
Last Updated : 05 Apr 2021 07:29 PM

அதிகரிக்கும் கரோனா தொற்று: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

pm-modi-reviews-covid-19-situation-vaccination-status
பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

நாட்டில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதையடுத்து, சுகாதாரத்துறை, உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 93,249 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 513 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா 2-வது அலை என்று மத்திய அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 2-வது அலை வந்துவிட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்து வேண்டும், மக்களுக்கு கரோனா ஆர்டிபிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியைப் போடவும் மத்திய அரசு அறிவுறுத்தி, அதை வேகப்படுத்தவும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரை 7.59 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்து வருவது குறித்தும், கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்தும் அறிய பிரதமர் மோடி இன்று சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் " நாட்டில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவது குறித்தும், தடுப்பூசி செலுத்தப்படும் நிலை குறித்தும் பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அமைச்சரவைச் செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான வினோத் பால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்" எனத் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் 93,249 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, டெல்லி, தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் இருந்து 80.96 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!



COVID-19PM ModiPM Modi reviews COVID-19 situationVaccination statusStatus of vaccinationகரோனா வைரஸ்பிரதமர் மோடிகரோனா பரவல் அதிகரிப்புகரோனா தடுப்பூசிபிரதமர் மோடி ஆலோசனை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x