

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இடத்தில் மேலும 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் கூட்டாக மிகப் பெரிய அளவில் நேற்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா்.
இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்தனா். 15 -பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 5 வீரர்களில் 2 -பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்களில் 15பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் உடனடியாக கூடுதல் படைகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை சத்தீஸ்கர் மாநில காவல்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் அந்த பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் 14 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி காணாமல் போன வீரர்களின் எண்ணிக்கையும் உயரந்துள்ளது. சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.