

அசாமில் 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அங்கு பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:
அசாமில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. தங்கள் ஆட்சிக் காலத்தில் அசாமின்வளர்ச்சிக்காக அக்கட்சி ஒன்றுமேசெய்யவில்லை. எங்கு பார்த்தாலும் பஞ்சமும், வறட்சியும்தான் தலைவிரித்தாடி யது. பழங்குடியினர் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். தேயிலை விவசாயிகளின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன.
இந்தக் காலக்கட்டத்தில்தான், மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால், எத்தனையோ நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அதனை காங்கிரஸ் செய்யவில்லை.
காங்கிரஸின் இருண்ட ஆட்சி முடிவடைந்து, 2016 -இல் அசாமில் பாஜக ஆட்சி மலர்ந்தது. இந்த 5 ஆண்டுகாலத்தில் மாநிலத்தில் பல புதிய தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் தொடங்கப்பட் டன. இதனால் அசாம் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைத் தது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகவும் அவசியம். அசாமில் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 6 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் வளர்ச்சி அரசியல். இதனைதான் பாஜக செய்கிறது.
பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளில் 35 முறை அசாமுக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத் திருக்கிறார். ஆனால், மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 10 முறை கூட அசாமுக்கு வரவில்லை. இதிலிருந்தே எந்தக் கட்சி அசாம் நலனின் மீது அக்கறை கொண்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு நட்டா பேசினார்.