

புகழ்பெற்ற இந்திப் பேராசிரியரும் தமிழ் மொழிபெயர்ப்பாளருமான எச்.பாலசுப்பிரமணியம் டெல்லியில் காலமானார்.
பேராசிரியர் எச்.பாலசுப்பிரமணியத்தின் பூர்வீகம் கல்லிடைக்குறிச்சி. இந்தியில் முனைவர் பட்டம் பெற்றவர். உள்துறை அமைச்சக அதிகாரியாகவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சக இந்தி பேராசிரியராகவும் பணியாற்றினார். டெல்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் வருகைதரு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். கரோனா தொற்றால் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் காலமானார். அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவரது மனைவி முன்பே காலமாகிவிட்டார்.