Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

விடுமுறை நாட்களிலும் கரோனா தடுப்பூசி

ஏப்ரல் மாதத்தில் விடுமுறை நாட்களிலும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகா தாரத் துறை அறிவித்துள்ளது.

வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே அறிவித்தார். மத்திய அரசின் அறிவுரையின்படி பல்வேறு மாநிலங்களில் வாரத்தின் 7 நாட்களும் கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும் இரவு நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமான பயனாளிகள் வராததால் பெரும்பாலான மாநிலங்களில் பகலில் மட்டுமே தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பின்னணியில் மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ்பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் வாரத்தின் 7 நாட்களும் கரோனா தடுப்பூசி போடப்படும். அதோடு மட்டுமன்றி அரசு விடுமுறை நாட்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும். அனைத்து மாநிலஅரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி, நாடு முழுவதும் ஒரே நாளில் 13,04,412 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 6,43,58,765 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டி ருக்கிறது.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு நேற்று முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டிருப்பதால் வரும் நாட்களில் பயனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா ஆகியோர் அனைத்து மாநில சுகாதார துறைசெயலாளர்களுடன் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அப்போது கரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

‘‘தடுப்பூசி விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை. 2-ம் கட்ட தவணைக்காக தடுப்பூசிகளை சேமித்து வைக்க வேண்டாம். மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் தொடர்ந்து விநியோ கம் செய்யப்படும்.

தகுதிவாய்ந்த சுகாதார ஊழியர்கள் மூலம் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தடுப் பூசி வீணாவதை தடுக்க முடி யும். தடுப்பூசி விவரங்களை இணையத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்’’ என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x