பிஎப், சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பிஎப், சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Updated on
1 min read

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) மற்றும் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கடுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசாங்கத்தில் அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் ஏற்கெனவே 2020 2021 கடைசிக் காலாண்டில் இருந்த விகிதத்திலேயே தொடரும். நேற்றிரவு வெளியிடப்பட்ட புதிய வட்டி விகித அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், "ஏப்ரல் 1, 2021 முதல் பிபிஎப்வட்டி விகிதம் 7.1-லிருந்து6.4 சதவீதமாகக் குறைக்கப்பட் டுள்ளது. 46 ஆண்டுகளில் முதல் முறையாக பிபிஎப் வட்டி விகிதம் 7 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே, தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்எஸ்சி) மீதான வட்டி 6.8-லிருந்து 5.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி 6.9-லிருந்து 6.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுகன்ய சம்ரிதி யோஜனா (எஸ்எஸ்ஒய்) திட்டத்துக்கான வட்டி 7.6-லிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தபால் அலுவலக சேமிப்புக் கான வட்டி விகிதம் 0.40 முதல் 1.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதம் 4.4 சதவீதம் முதல் 5.3 சதவீதமாக இருக்கும்.இதுபோல பல்வேறு கால அளவு கொண்ட வங்கி வைப்புகள் மீதான வட்டியும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எளிய மக்களின் ஆதாரமான சிறு சேமிப்பு வட்டி விகிதத்தில் கைவப்பதா என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுந்தன. இதனையடுத்து வட்டி குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in