Published : 03 Nov 2015 09:03 AM
Last Updated : 03 Nov 2015 09:03 AM

இந்தோனேசியாவில் இருந்து அழைத்துவரப்படும் சோட்டா ராஜனை காவலில் வைக்க மும்பை சிறைச்சாலை தயாராகிறது

நிழல் உலக தாதா சோட்டா ராஜனை காவலில் வைக்க, மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச் சாலையை அதிகாரிகள் தயார் படுத்தி வருகின்றனர். அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். பின்னர் தாவூத்திடம் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டார். மும்பை குண்டுவெடிப்பு, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், போதை கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.

இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற சோட்டா ராஜனை சமீபத்தில் இந்தோனேசியாவில் இன்டர் போல் போலீஸார் கைது செய்தனர். அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் அந்த நாட்டின் பாலி தீவுக்கு சென்றுள்ளனர்.

சோட்டா ராஜனுக்கு தாவூத் கூட்டாளிகளால் ஆபத்து இருப்ப தாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ் திரேலியாவில் சோட்டா ராஜன் இருந்த போது அவரை கொலை செய்ய தாவூத்தின் நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல் திட்டமிட்டுள்ளார். ஆனால், தகவல் அறிந்து அங்கிருந்து சோட்டா ராஜன் தப்பி இந்தோனேசியா சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

எனவே, இந்தியாவுக்கு சோட்டா ராஜனை அழைத்து வந்தால், எந்த இடத்தில் பாதுகாப்பாக காவல் வைப்பது என்று மும்பை போலீஸார் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச்சாலை யில் சோட்டா ராஜனை காவலில் வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக சிறையில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சோட்டா ராஜன் மீதான பல வழக்குகள் மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பாலியில் இருந்து அவரை சிபிஐ அதிகாரிகள் மும்பைக்கு விரைவில் அழைத்து வருவார்கள் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் காவலில் வைத்திருந்த போது, இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர் (ஐடிபிபி) பாதுகாப்புக்காக கூடுதலாக குவிக்கப்பட்டனர். அதுபோல் சோட்டா ராஜனின் கூடுதல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் மற்றும் ஐடிபிபி படையினரை ஈடுபடுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கசாப் வைக்கப்பட்டிருந்த ‘செல்’லில் சோட்டா ராஜனையும் காவலில் வைக்க முடிவு செய் துள்ளனர். தற்போது அங்கு லஷ் கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஜபியுதீன் அன்சாரி அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், ஆர்தர் சாலை யில் சிறையில் உள்ள கைதிகளின் விவரங்களை அதிகாரிகள் தீவிர மாக ஆராய்ந்து வருகின்றனர். மேலும், சோட்டா ராஜன் மீது தாக்குதல் எதுவும் நடக்காமல் இருக்க, சிறைக்குள்ளேயே சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த சிறை அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளனர் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாலித் தீவில் உள்ள டென்பாசர் நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்ட சோட்டா ராஜன்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x