

மேற்குவங்க மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா நேற்று வெளியிட்ட ஆடி யோவில் கூறியிருப்பதாவது:
கடந்த 10 ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஓர் ஆலை கூட தொடங்கப்படவில்லை. மேற்குவங்க இளைஞர் கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. கல்வி, சுகாதாரத் துறை சீர்குலைந்துள்ளது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது.
மறுபுறம் பிரிவினைவாதத்தை பாஜக தூண்டி வருகிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தை அமல்படுத்த துடிக்கிறது. திரிணமூல், பாஜக, இரு கட்சியினருமே சதிகாரர்கள். நந்திகிராம், சிங்குரில் இரு கட்சியினரும் கூட்டாக சேர்ந்து சதியில் ஈடுபட்டனர். இப்போது இரு கட்சிகளும் பரஸ்பரம் சேற்றை வாரி இறைக்கின்றனர். ஜனநாயகம், சமூக ஓற்றுமையை நிலைநாட்ட மதச்சார்பற்ற இடதுசாரி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.