

கொலை, கொலை முயற்சி, கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட சோட்டா ராஜன் கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தோனேசி யாவின் பாலி தீவில் கைது செய்யப் பட்டார். அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அவரை சிபிஐ அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
அவரது காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ நீதி மன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை மேலும் 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.
மும்பையில் சோட்டா ராஜன் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள் ளன. இவை தவிர டெல்லியிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.