Published : 30 Mar 2021 06:59 AM
Last Updated : 30 Mar 2021 06:59 AM

பாஜக, காங்கிரஸ் இடையே ரகசிய உடன்பாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

திருவனந்தபுரம்

பாஜக, காங்கிரஸ் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மார்க்சி ஸ்ட் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3-வது அணியாக பாஜக களம் இறங்கியுள்ளது.

குருவாயூர், தலசேரி, தேவிகுளம் ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர் களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில் திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளரும் அந்த கட்சியின் மூத்த தலை வருமான நடிகர் சுரேஷ் கோபி கூறும்போது, "குருவாயூர் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) வேட்பாளர் காதரை வெற்றி பெற செய்ய வேண்டும். தலசேரி தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஷம்சீரை தோல்வி அடைய செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், கண்ணூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக, காங்கிரஸ் இடையே ரகசிய உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. சுரேஷ் கோபியின் கருத்து இதை உறுதி செய்கிறது. தலசேரி, குருவாயூர் தொகுதிகளில் பாஜகவுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ரகசிய உடன் பாட்டை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ் ரகசிய உடன்பாடு இதற்கு முன்பே பகிரங்கமாக தெரிய வந்தது. கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை. பாஜகவோடு இணைந்து கொண்டு காங்கிரஸும் தீர்மானத்தை எதிர்த்தது.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக இடையே யான ரகசிய உடன்பாடு தற்போது அம்பலமாகி உள்ளது.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x