பிஹார் மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்: அமித் ஷா

பிஹார் மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்: அமித் ஷா
Updated on
1 min read

பிஹார் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் பின்னடைவை அளித்துள்ள நிலையில், நிதிஷ் தலைமை மெகா கூட்டணிக்கு பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.

"பிஹார் மாநிலத்தை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச் செல்ல புதிய பிஹார் அரசுக்கு எங்கள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பிஹார் மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம், பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நான் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நிதிஷுக்கு மோடி வாழ்த்து

பிஹாரில் நிதிஷ் குமார் 3-வது முறையாக மீண்டும் முதல்வர் ஆகிறார். அவரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் மோடி வெளியிட்ட பதிவில், நிதிஷ் குமாரின் வெற்றிக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து நிதிஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தொலைபேசியில் பிரதமர் வாழ்த்து கூறினார், அவருக்கு மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in