Published : 29 Mar 2021 03:15 am

Updated : 29 Mar 2021 05:38 am

 

Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 05:38 AM

பட்டுப்போன மரத்தில் 6 அடி நீள பென்சில்: மகாராஷ்டிர பள்ளி அசத்தல்

6-feet-pencil

புனே

கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பள்ளிகளெல்லாம் மூடப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவின் வாய் நகரில் உள்ள திராவிட் உயர்நிலை பள்ளிவளாகத்தில் இருந்த சில்வர் ஓக் மரம் பலஆண்டுகளாக பட்டுப்போய் இருந்திருக் கிறது. இந்தக் கரோனா காலத்தில் பள்ளி நிர்வாகம் பட்டுப்போன மரத்தை கலை வடிவமாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

எனவே தச்சு வேலைக்காரர்களை நியமித்து, எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் இருந்த பட்டுப் போன இந்த மரத்தை அழகான 6 அடி நீள பென்சிலாக உருவாக்கியிருக்கிறோம். தற்போது இந்தக் கலை வடிவத்தை அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஆர்வமாக வந்து பார்த்து செல்கின்றனர் என்று பள்ளியின் நிர்வாகி நாகேஷ் மோனே கூறியுள்ளார். வீணான பொருளிலிருந்து உபயோகமான பொருளை உருவாக்க முடியும் என்பதைஇதன் மூலம் மாணவர்களும் கற்றுக்கொள் வார்கள் என்றும், இந்தப் பென்சிலை உருவாக்க ஆறு நாட்கள் ஆனதாகவும் அவர் கூறினார். அந்த பென்சிலில் மத்திய அரசின் ஆரம்பக் கல்வி ஊக்குவிப்புத் திட்டமான ‘சர்வ சிக்‌ஷ அபியன்’ திட்டத்தின் லோகோவும் பொறிக்கப்பட்டிருக்கிறது.


இந்தப் பள்ளி கல்வியாளர்கள் மற்றும் பால கங்காதர் திலக் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களால் உருவாக்கப்பட்டது.


6 அடி நீள பென்சில்காராஷ்டிர பள்ளிகரோனா வைரஸ் பரவல்6 feet pencil

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x