

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். சம்பவ இடத்தில் கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
முசாபர்நகரின் புகானா என்ற பகுதியில் இரு பிரிவினரிடையே முன் விரோதம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டிருந்த மோதல் இன்று கலவரமாக மாறியது. கலவரத்தின்போது கிராமத்தினர் சிலர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் இருவர் பலியானதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில், பதற்றம் நிலவுவதை அடுத்து புகானா மாவட்டம் முழுவதிலும், கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முசாபர்நகரில் ஏற்பட்ட வன்முறையின்போது, புகானா மாவட்டம் மிக பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.