பிஹாரில் முதன் முறையாக போட்டியிட்ட உவைஸியின் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை

பிஹாரில் முதன் முறையாக போட்டியிட்ட உவைஸியின் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை
Updated on
1 min read

பிஹாரின் சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முஸ்லீம் கட்சியான அகில இந்திய மஜ்லீஸ் ஏ இத்தஹாதூல் முஸ்லீமின் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அதற்கு ஒரு இடங்களிலும் வெற்றி கிடைக்கவில்லை.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பல வருடங்களாக முக்கிய முஸ்லீம் அரசியல் கட்சியாக இருப்பது அகில இந்திய மஜ்லீஸ் ஏ இத்தஹாதூல் முஸ்லீமின். இதன் தலைவரும் ஐதராபாத்தின் மக்களை தொகுதி உறுப்பினருமான அசாசுத்தீன் உவைஸு சர்ச்சைக்குரிய மதவாதம் மீது கூறும் கருத்துக்கள் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்துவது உண்டு. பிஹாரில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் சீமாஞ்சல் பகுதியில் ஆறு தொகுதிகளில் அவரது கட்சி போட்டியிட்டது.

இதற்காக உவைசி அங்கு தன் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தார். இவரது கட்சியின் போட்டி இங்கு மகாகூட்டணிக்கு ஆதரவான முஸ்லீம் வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக இந்த ஆறு தொகுதிகளில் உவைஸிக்கு ஒன்ற்லும் வெற்றி கிடைக்கவில்லை.

இது குறித்து உவைஸி ‘தி இந்து’விடம் தொலைபேசி உரையாடலில் ‘நாங்கள் பிஹாரின் முஸ்லீம் வாக்குகளை பிரிக்க வேண்டி 24 தொகுதிகளில் போட்டியிடுவதாக வெளியான செய்தி தவறானது. இதில் அறிவித்தபடி போட்டியிட்ட 6 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அங்கு ஒரு அடித்தளம் அமைத்துள்ளோம். பிஹாரின் முஸ்லீம்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும்.’ எனத் தெரிவித்தார்.

ஆந்திரா மாநிலத்திற்கு வெளியே முதன்முறையாக மகராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் கடந்த வருடம் போட்டியிட்டது. அதில், இரண்டு தொகுதிகளில் வெற்று பெற்றவர்கள், மூன்றில் மிகக் குறைந்த வாக்குகளில் இரண்டாம் இடம் பெற்றனர். இதை அடுத்து டெல்லியில் போட்டியிட திட்டமிட்டவர்கள், கடைசிநேரத்தில் பின் வாங்கினர். இதற்கு, பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக அதன் எதிர்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து விடும் எனக் காரணம் கூறப்பட்டது. இதை அடுத்து பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் 24 தொகுதிகளில் தம் வேட்பாளர்களை நிறுத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிஹாரில் 16.5 சதவிகித முஸ்லீம்கள் இருப்பதாகக் கருதப்படும் பீஹாரின் சீமாஞ்சால் பகுதியில் 40 முதல் 60 சதவிகித முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in