மனநல சிகிச்சை முடிந்த நிலையில் 2 மகள்களை நரபலி கொடுத்த தம்பதி சிறையில் அடைப்பு

மனநல சிகிச்சை முடிந்த நிலையில் 2 மகள்களை நரபலி கொடுத்த தம்பதி சிறையில் அடைப்பு
Updated on
1 min read

இரண்டு மகள்களை நரபலி கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினருக்கு மனநல சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் கல்லூரிப் பேராசிரியர் புருஷோத்தம நாயுடு. இவரது மனைவி பத்மஜா, தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அலக்கியா, சாய் திவ்யா ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

இதனிடையே, 2 மாதங்களுக்கு முன்பு தங்களின் இரண்டு மகள்களையும் நரபலி என்ற பெயரில் இந்த தம்பதியினர் வீட்டில்வைத்தே கொலை செய்தனர்.இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, புருஷோத்தம நாயுடுவையும், பத்மஜாவையும் கைது செய்த போலீஸார், மதனப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள், தம்பதியினருக்கு மனநல சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, விசாகப்பட்டினம் மனநல மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை முடிவடைந்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் விசாகப்பட்டினம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சூழலில், இவ்வழக்கை விசாரித்து வரும் மதனபள்ளி போலீஸார், விசாகப்பட்டினம் சென்றுள்ளனர். அங்கு சிறையில் உள்ள புருஷோத்தம நாயுடு மற்றும் அவரது மனைவி பத்மஜாவையும் அழைத்துச் சென்றுநாளை மதனப்பள்ளி நீதிமன்றத் தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர். அதன் பிறகு, அவர்கள் மதனப்பள்ளி சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in