Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்; காஷ்மீர் இளைஞர்களுக்கு கிராபிக்ஸ் பயிற்சி அளிக்கும் ஐடி தொழிலதிபர்

ஷேக் ஆசிப்

நகர்

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவரும் பிரிட்டனின் ஐடி நிறுவன உரிமையாளருமான ஆசிப் காஷ்மீர் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளித்து வருகிறார்.

காஷ்மீரின் பட்டமலூ பகுதி யைச் சேர்ந்த ஷேக் ஆசிப், மிகவும் பிரபலமான ‘டேலன்ட் எஜுகேஷனல் இன்ஸ்டிடியூட்டில்’ தொடக்கக் கல்வி பயின்றார். குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக 8-ம் வகுப்பிலேயே படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டார்.

ஆனால் சிறு வயதிலேயே கணினி மீது அதிக ஆர்வம் இருந்ததால், அவர் சில ஐடி நிறுவனங் களில் பணியாற்றினார். கிராபிக்ஸ் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றார். பின்னர் தனது வீட்டிலேயே ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இவரது பணிகளைப் பார்த்த சிலர் இணையதள வடிவமைப்பையும் கற்றுக்கொள்ள லாமே என ஆலோசனை வழங்கினர். இதையடுத்து பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இணையதள வடிவமைப்பை கற்றுக் கொண்டார்.

பின்னர் கூகுள் ஊழியர் ஹம்ஜா சலிமுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து 2016-ம் ஆண்டு இணையதள வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். இதன் தலைமையகத்தை 2018-ல்பிரிட்டனின் மான்செஸ்டருக்கு மாற்றினர். பின்னர் லண்டனின் புகழ்பெற்ற தேம்ஸ் நதியின் பெயரை அடிப்படையாகக் கொண்டு, ‘தேம்ஸ் இன்போடெக்’ என நிறுவனத்தின் பெயரை மாற்றினர்.

ஐடி விழிப்புணர்வு

இதனிடையே, காஷ்மீர் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக 2018-ல் ஆசிப் சொந்த ஊர் திரும்பினார். இதுகுறித்து ஆசிப் கூறும்போது, “காஷ்மீரில் இப்போது, 100 மருத்துவர்களுக்கு ஒரு ஐடிநிபுணர்தான் உள்ளார். ஐடி துறையில் எதிர்காலம் இல்லை எனசிலர் கருதுகின்றனர். ஆனால், ஏராளமான வாய்ப்புகள் இதில்உள்ளன. இதுகுறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இணையதள மற்றும் கிராபிக்ஸ் வடிமைப்பு குறித்து பயிற்சி அளித்து வருகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x