

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் படைத்த ‘தனுஷ்’ ஏவுகணை நேற்று ஒடிஷாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
வங்காளவிரிகுடா கடலில் நிறுத்தப்பட் டிருந்த ஐஎன்எஸ் சுபத்ரா கடற்படை கப்பலில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. நிலத்தில் இருந்து நிலத்துக்கு பாயும் இந்த தனுஷ் ஏவுகணை 500 கிலோ எடை கொண்ட அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் படைத்தது என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. தவிர நிலம் மற்றும் கடல் பகுதியில் 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் வகையில் தனுஷ் ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்திய தரைப்படையில் தனுஷ் ஏவுகணை சேர்க்கப்பட்டுள்ளது.