Published : 27 Mar 2021 11:35 AM
Last Updated : 27 Mar 2021 11:35 AM

‘‘யாருக்கு வாக்களித்தாலும் தாமரையிலும் பதிவாகும் வாக்கு; மேற்குவங்க தேர்தலில் முறைகேடு’’ - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா

மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டமாக இன்று 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் தாமரைச் சின்னத்தில் வாக்களித்தாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன்படி அசாமில் 47 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் என 77 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜங்கல் மெஹல் பிராந்தியத்தில் உள்ளன. இங்கு திரிணமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் தலா 29 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 18 பேர், காங்கிரஸ் சார்பில் 6 பேர், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 4 பேர், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் 2 பேர் உட்பட மொத்தம் 191 பேர் களத்தில் உள்ளனர்.

மேற்குவங்கத்திலும் ஜார்கிராம், மேற்கு மித்னாபூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அதிகஅளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மேற்குவங்கத்தில் காலை 10.00 மணி நிலவரப்படி 15.30% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் முதல்கட்டத் தேர்தலில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக திரிணமூல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் தாமரைச் சின்னத்தில் வாக்களித்தாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாஜவின் தாமரைச் சின்னத்தில் பதிவாகும் வகையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்குப்பதிவு விவரங்களை திடீரென மாற்றி அறிவித்து விட்டதாகவும் புகார் கூறியுள்ளது.

ஏதோ பெரிய அளவில் முறைகேடு நடப்பதால் உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லயில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று நண்பகலில் சந்தித்து புகார் அளிக்கவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x