

நிழலுலக தாதா 'சோட்டா' ராஜனை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மேலும் ஒருநாள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷிய சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள மலையில் தீப்பிழம்பு புகைமூட்டும் காணப்பட்டது. இதனால், சர்வதேச விமான நிலையம் இன்று ஒருநாள் மூடப்பட்டது.
பாலியில் இருந்து நாளை காலை 8.45 மணி வரை எந்த விமானமும் புறப்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ராஜனை இன்று இந்தியா கொண்டுவர முடியவில்லை.
கொலை, கொலைமுயற்சி, கடத்தல் உட்பட 75 வழக்குகளில் தொடர்புடைய சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ குழு இந்தோனேசியாவில் முகாமிட்டுள்ளது.
இந்தோனேஷிய அதிகாரிகள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், ராஜனை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டதாகவும் சிபிஐ குழு தெரிவித்துள்ளது.