சாலை விதியை மீறினால் ஓட்டுநர் உரிமம் பறிக்க டெல்லி போலீஸாருக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றக் குழு பரிந்துரை

சாலை விதியை மீறினால் ஓட்டுநர் உரிமம் பறிக்க டெல்லி போலீஸாருக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றக் குழு பரிந்துரை
Updated on
1 min read

டெல்லியில் சாலை விதி முறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலித்த பின், உடனே அனுப்பி விடுவதுண்டு. ஆனால் இனி அவர்களிடம் அபராதம் வசூல் செய்வதுடன் அவர்களின் ஓட்டுநர் உரிமங்களையும் பறிக்கும் அதிகாரம் போலீஸாருக்கு அளிக் கப்பட உள்ளது. இதற்கான பரிந் துரை, உச்ச நீதிமன்றத்தால் அமைக் கப்பட்ட சாலை பாதுகாப்புக் குழுவால் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையின் போக்குவரத்து சிறப்பு ஆணையர் முகேஷ் சந்தர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

“உச்ச நீதிமன்றக் குழுவின் பரிந் துரை விரைவில் அமல்படுத்தப் படும். போக்குவரத்து விதிமீறல்க ளுக்கு எதிரான நடவடிக்கையில் டெல்லி காவல்துறைக்கு மேலும் பல அதிகாரங்களை இக்குழுவிடம் கோரியுள்ளோம்” என்றும் முகேஷ் கூறியுள்ளார்.

நாடு முழுவதிலும் போக்கு வரத்து விதிமீறல்கள் மீது ஓட்டுநர் உரிமங்களை பறித்து, குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு அதை நிறுத்தி வைக்கலாம் என உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி பரிந்துரை செய்தது. அதில் இதற்கான அதிகாரம் மாநில போக்குவரத்து துறையிடம் தரப்பட்டிருந்தது.

இதை விரைவில் அமல்படுத்த இருப்பதாக டெல்லி போலீஸார் அப்போது அறிவித்தனர். ஆனால் போலீஸாரின் பரிந்துரையின் பேரில், விதிகளை மீறியவருக்கு போக்குவரத்து துறையினர் நோட்டீஸ் அனுப்பி, நேரில் அழைத்து, உரிமத்தை பறிப்பதற் குள் 3 மாதம் காலாவதியாகி விடும் சூழல் நிலவியது. இதை உச்ச நீதிமன்றக் குழுவின் கவனத்துக்கு டெல்லி போலீஸார் கொண்டு சென்றனர்.

இதையடுத்து ஓட்டுநர் உரிமத்தை பறிப்பற்கான அதி காரத்தை டெல்லி போலீஸாரிடமே அளிக்க உச்ச நீதிமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு பறிக்கப்படும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்குப் பிறகே திரும்பத் தரப்படும்.

நாடு முழுவதிலும் சாலை விதி மீறல்களால் ஏற்படும் உயிரி ழப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலை பாதுகாப்புக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்தக் குழு, சாலை விபத்துக்களை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் பரிந் துரைகளை சமர்ப்பித்து வருகிறது.

சாலை விதிகளை மாநிலங் கள் முறையாக அமல்படுத்தாத தால் விபத்துகளும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது என்றும் இக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in