சமீபத்திய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை; தனியாருக்கு ஆதார் விவரம் தரப்படவில்லை: இந்திய ஆதார் ஆணையம் விளக்கம்

சமீபத்திய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை; தனியாருக்கு ஆதார் விவரம் தரப்படவில்லை: இந்திய ஆதார் ஆணையம் விளக்கம்
Updated on
1 min read

ஆதார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தவறானவை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக யுஐடிஏஐ பெங்களூரு மண்டல துணைத் தலைமைஇயக்குநர் ஆர்.எஸ்.கோபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆதார் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, வாழுநர் (Resident) வழங்கும்பெயர், முகவரி உள்ளிட்ட டெமொக்ராபிக் மற்றும் விரல் ரேகை அல்லதுகண் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களை சரிபார்த்து சேகரித்து இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ‘ஆதார்’ என்ற 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. இது திறமையான, வெளிப்படையான, நல்லாட்சிக்கும், மானிய சலுகைகள், சேவைகளுக்கும் பயன்படுகிறது.

ஆதார் சட்டத்தில் உள்ளபடியும், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படியும் அடையாளத் தகவல் மற்றும் தனிநபர்களின் அங்கீகார பதிவுகளின் பாதுகாப்பை யுஐடிஏஐஉறுதி செய்கிறது. யுஐடிஏஐ சேகரித்துள்ள தகவல்கள், ஆதார்எண்கள் அங்கீகாரத்தை தவிரவேறு எதற்கும் பயன்படுத்தப் படாது.

அடையாளத் தகவல் அல்லது அங்கீகாரப் பதிவுகள் உட்பட எந்தவொரு தகவலையும் (முக்கியமான பயோமெட்ரிக் தகவல்களைத் தவிர) உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி மட்டுமே வெளியிட முடியும். மேலும், இது யுஐடிஏஐ மற்றும் சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவர் ஆகியோருக்கு, சட்டப் பிரிவு 31-ன்படி விசாரணைக்கான வாய்ப்பை வழங்கிய பிறகு மட்டுமே வெளியிட முடியும்.

யுஐடிஏஐ தனது அங்கீகரிக்கப்பட்ட பயனீட்டு நிறுவனங்கள் தவிர வேறு எந்த நிறுவனத்துடனும் எந்த தரவையும் பகிரவில்லை. மேலும், பயனீட்டு நிறுவனங்கள், வாழுநர்களின் ஆதார் விவரங்கள் பற்றிய எந்த தகவலையும் சேமிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாழுநர்களின் விவரங்களை யுஐடிஏஐ மொத்தமாக பகிர்ந்து கொண்டுள்ளது என்ற சமீபத்திய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. யுஐடிஏஐ எப்போதும் வாழுநர்களின் தனி உரிமையை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in