ராணுவத்தில் பெண் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்ற விதிமுறைகள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

ராணுவத்தில் பெண் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்ற விதிமுறைகள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
Updated on
1 min read

ராணுவத்தில் பெண் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்ற அமைக்கப் பட்டுள்ள விதிமுறைகள் தொடர் பாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகிய கால சேவை கமிஷனின் கீழ் 10 அல்லது14 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். இப்போது அவர்களுக்கு நிரந்தர கமிஷனுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. இதன் மூலம் அவர்கள்ராணுவத்தில் தமது சேவைகளை தொடரவும், தரவரிசைப்படி ஓய்வு பெறவும் முடியும். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரிவர அமல்படுத்தப்படவில்லை.

இதனிடையே இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 80 பெண் அதிகாரிகள் தங்களுக்கு நிரந்தர கமிஷன்(தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு) கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறியதாவது:

ராணுவத்தில் பெண்கள் நிரந்தர கமிஷனைப் பெறுவதற்கான மருத்துவ தகுதி தேவை என்பது தன்னிச்சையானது மற்றும் பகுத்தறிவற்றது ஆகும். ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கிய நமது சமுதாயத்தின் கட்டமைப்பை நாம் மதிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். பெண் அதிகாரிகளுக்கு வாய்ப்பைவழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அதை ராணுவ அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி பெண்அதிகாரிகள் வழக்கு தொடுத்துள்ளனர். இங்கு வழக்கு தொடுத்துள்ள பெண் அதிகாரிகள் பலர், பல்வேறு விருதுகளை வென்றவர்கள். மேலும் வெளிநாடுகளில் பல்வேறு பயிற்சியை முடித்தவர்கள்.

விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களைக் கூட ராணுவ அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். ராணுவ அதிகாரிகளைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆணையமானது அவர்களை தேர்வு செய்வதற்குப் பதிலாக நிராகரித்துள்ளது.

இந்த விஷயத்தில் அரசின் வாதம் பாரபட்சமான, குழப்பமான மற்றும் ஒரே மாதிரியான அடிப்படையில் அமைந்துள்ளது. பெண்அதிகாரிகள் தாங்கள் சேவை செய்த காலத்தை கணக்கில் கொள்ளாமல் அவர்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரி வித்தனர்.

இந்திய விமானப் படையிலும், இந்திய கடற்படையிலும் ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in