Published : 25 Nov 2015 09:37 AM
Last Updated : 25 Nov 2015 09:37 AM

2 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தெலங்கானாவில் டிஆர்எஸ்; ம.பி.யில் காங்கிரஸ் வெற்றி

தெலங்கானா மாநிலத்தில் நடந்த மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியும் ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 4 மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 3-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் தொகுதிக்கான இடைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் பசுநூரி தயாகர் காங்கிரஸ் வேட்பாளர் சர்வே சத்ய நாராயணாவை சுமார் 4.59 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், பாஜ-தெலுங்கு தேசம் கூட்டணி வேட்பாளர்கள் உட்பட 22 பேரும் டெபாசிட் இழந்தனர்.

ம.பி..யின் ரட்லம்-ஜபுவா மக்களவைத் தொகுதியை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இதில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் புரியா, பாஜக வேட்பாளர் நிர்மலா புரியாவை சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியின் பாஜக எம்பி திலிப் சிங் புரியா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

ஆனால் இதே மாநிலத்தில் தேவஸ் சட்டப்பேரவைத் தொகுதி யை பாஜக தக்கவைத்துக் கொண் டது. இக்கட்சியின் காயத்ரி ராஜே, காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.சாஸ்திரியை சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற் கடித்தார்.

மணிப்பூரின் தங்மீபந்த் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குமுக்சம் ஜாய்கிஷன், ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதின் வைக்கோமைவிட 1,907 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். தோங்ஜு தொகுதியில் பாஜக வேட்பாளர் தொங்கம் பிஷ்வஜித், காங்கிரஸ் வேட்பாளர் பிஜோய் கொய்ஜமை 3,123 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மிசோரமின் அய்ஸால் வடக்கு-3 தொகுதியில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் லால் தன்ஜரா, மிசோரம் தேசிய முன்னணி வேட்பாளர் கே.வன்லால்வெனாவை 3,385 வாக்குகள் வித்தியாசத்தில் தோற் கடித்தார். மேகலயாவின் நாங்ஸ்டான் தொகுதியை மலைப் பகுதி மக்கள் ஜனநாயகக் கட்சி தக்கவைத்துக் கொண்டது.

இக்கட்சியின் வேட்பாளர் டோய்ஸ்டார்னெஸ் ஜின்டியாங், காங்கிரஸ் வேட்பாளர் கேப்ரி யேல் வலாங்கை 2,764 வாக்குகள் வித்தியாசத்தில் தோற் கடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x