5 மாதங்களுக்குப் பிறகு கடும் உயர்வு: மீண்டும் 50 ஆயிரத்தை கடந்தது கரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியது

5 மாதங்களுக்குப் பிறகு கடும் உயர்வு: மீண்டும் 50 ஆயிரத்தை கடந்தது கரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியது
Updated on
1 min read

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 53,476 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,476 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,87,534ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 26,490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,12,31,650 பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,60,692 ஆக அதிகரிதுள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,95,192 ஆக உள்ளது. இதுவரை 5,31,45,709பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in