இமாச்சல் முதல்வர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு: அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

இமாச்சல் முதல்வர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு: அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை
Updated on
1 min read

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் கடந்த 2009-2011 வரையி லான காலக்கட்டத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.1 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தியபோது, எல்ஐசி முகவர் சவுஹான் என்பவரின் உதவியுடன் ஆயுள் காப்பீட்டில் ரூ.6.1 கோடியை அவர் முதலீடு செய்திருப்பது தெரியவந்தது. விவசாய தொழிலில் கிடைத்த லாபத் தொகை மூலம் இந்த பணம் ஈட்டப்பட்டதாக வீரபத்ர சிங்கும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

ஆனால், 2012-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கில் விவசாய தொழில் வருவாய் தொடர்பாக சுட்டிக்காட்டி இருந்த விவரங்கள் ஏற்கும்படியாக இல்லை. இதையடுத்து வீரபத்ர சிங்கின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற் கொண்டு பல முக்கிய ஆவணங் களை கைப்பற்றினர். அத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்த் சவுஹான், அவரது சகோதரர் சி.எல்.சவுஹான் ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் வரு மானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வீரபத்ர சிங் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. தவிர வீரபத்ர சிங்கும், அவரது கூட்டாளிகளும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்களும் தற்போது சிக்கி இருப்பதாக கூறப் படுகிறது.

வீரபத்ரசிங் சவால்

இதற்கிடையில் கடந்த சனிக் கிழமை அன்று சிம்லாவில் நடந்த நிகழ்ச்சியின்போது வீரபத்ரசிங் பேசியதாவது: என் வாழ்க்கையில் இதுவரை எண்ணற்ற சவால்களை சந்தித்துவிட்டேன். மக்களின் அன்பும், ஆதரவும் இருப்பதால் தான் ஆறாவது முறையாக இம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறேன்.

நான் எந்த தவறும் செய்ய வில்லை. எனவே, இத்தகைய விசா ரணைகளுக்கு எல்லாம் அஞ்சப் போவதில்லை. எப்போதெல்லாம் எனக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்படு கிறதோ, அப்போதெல்லாம் முன்பைவிட பல மடங்கு வலுவாகதான் மக்கள் மனதில் வளர்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in