பிடிபி இளைஞர் அணி தலைவர் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கினார்: என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல்

பிடிபி இளைஞர் அணி தலைவர் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கினார்: என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல்
Updated on
1 min read

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) இளைஞர் அணித் தலைவரான வாஹிப் பாரா, காஷ்மீரில் இயங்கும் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கி வந்ததாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. அப்போது முதலாக, காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக என்ஐஏஅதிகாரிகள் தனியாக விசாரித்து வந்தனர். இந்த விவகாரத்தில் காவல் துணை ஆணையராகஇருந்த தாவீந்தர் சிங்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கடந்த ஆண்டுஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

வாஹிப் பாரா கைது

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காஷ்மீரில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துக்கு பிடிபி இளைஞர் அணித் தலைவர் வாஹிப் பாரா நிதியுதவி வழங்கி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, வாஹிப் பாராவையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஷாகின் அகமது, ஹுசேன் பரிமு உள்ளிட்டோரையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

என்ஐஏ-வின் இந்த நடவடிக்கைக்கு பிடிபி கட்சியின் தலைவரும், முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்திகடும் கண்டனம் தெரிவித்தார். வாஹிப் பாரா கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்நிலையில், வாஹிப் பாரா உள்ளிட்டோர் மீது என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், “ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஆயுதங்கள் வாங்குவதற்காக வாஹிப் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். அதேபோல, ஷாகின் அகமது, ஹுசேன் பரிமு உள்ளிட்டோர் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு துப்பாக்கிகளை வழங்கிவந்துள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in